2025 மே 09, வெள்ளிக்கிழமை

தாதிக்கு கொரோனா

Niroshini   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நெட்டாங்கண்டல் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சக பணியாளர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 30ஆம் திகதியன்று, நெட்டாங்கண்டல் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் பாண்டியன்குளம்-  செல்வபுரத்தைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர், சிகிச்சைக்காக யாழ். போதான வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், அங்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X