2025 மே 07, புதன்கிழமை

தாதியர், சிற்றூழியர்களுக்கு திலீபன் எம்.பி உறுதி

Niroshini   / 2021 ஜூன் 03 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா வைத்தியசாலை தாதியர் மற்றும் சிற்றூழியர்களுக்கு தீர்வைப் பெற்றுதருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன்  உறுதியளித்தார்.

நாடாளாவிய ரீதியில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுத்திருந்த நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வவுனியா வைத்தியசாலை ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, போராட்ட இடத்துக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், இவர்களினுடைய போராட்டம் நியாயமானதென்றார்.

'எதிர்வரும் திங்கட்கிழமை (07) ஜனாதிபதியுடனான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் கவனத்துக்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று, உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்' எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X