Niroshini / 2021 நவம்பர் 24 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. அகரன்
வவுனியா வைத்தியசாலையின் தாதியர்கள், சுகாதார பிரிவினர், இன்று (24) முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
7 கோரிக்கைகளை முன்வைத்து, வைத்திய சேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள், இன்று (24) முதல் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கின்றன.
இன்று (24) காலை 07 மணி முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக, வவுனிய பொது வைத்தியசாலையில் தாதியர்கள், ஏனைய சுகாதார பிரிவினரும் கடமைக்கு சமூகமளிக்காமையால், நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, இன்று அதிகாலை தொடக்கம் அடைமழை பெய்துவரும் நிலையில், மழையையும் பொருட்படுத்தாது, தூர இடங்களில் இருந்தும் வைத்தியசாலைக்கு பல்வேறு மருத்துவ தேவைக்காக வந்த நோயாளிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
30 minute ago
34 minute ago
47 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
34 minute ago
47 minute ago
10 Nov 2025