2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தாமரை இலை பறிக்கச் சென்ற பெண் பலி

Freelancer   / 2022 ஒக்டோபர் 08 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா - மாமடுப்பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று மாலை வீட்டிலிருந்து தாமரை இலை பறிப்பதற்காக குளத்து பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவாதனித்த சிலர் சம்பவம் தொடர்பாக மாமடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்குசென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

சம்பவத்தில் அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த சந்திரலதா வயது 49 என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .