2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

தாயால் விலை பேசி விற்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பூ. லின்ரன்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவிக் கிராம அலுவலர் பிரிவில் ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.  

தர்மபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பில் குழந்தையின் தாய் மற்றும் அதற்கு உடந்தையாகவிருந்த நபர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி தர்மபுரம் 7 ஆம் யுனிற் பகுதியில் வசிக்கும் தாய் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையைப் பணத்துக்காக விற்பனை செய்துள்ளார். மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவப் பரிசோதனைக்காகவும், பாதுகாப்புக்காகவும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை அல்லது வேறு காரணங்களால் இந்த விற்பனை நடைபெற்றதா? என்பது குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த குழந்தையை விலைபேசி விற்றமை தொடர்பான புகைப்படமும், இதுதொடர்பான கடிதமும் சற்றுமுன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயற்பாட்டுக்குப் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .