Niroshini / 2021 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாழ்வுபாடு கிராமத்தில், நேற்றைய தினம் சனிக்கிழமை, 35 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தாழ்வுபாடு கிராமத்தின் MN/70 கிராம அலுவலர் பிரிவை தற்காலிகமாக தனிமைப்படுத்தும் வகையில், கொழும்பு கொவிட்-19 தடுப்பு செயலணியிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், நேற்று (31) மதியம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், குறித்த 35 தொற்றாளர்களும், அப்பகுதியில் மீன் பதனிடும் தொழிற்சாலையில் கடமையாற்றுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.
இது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறமையால், குறித்த கிராமத்தின் MN/70 கிராம அலுவலர் பிரிவை தற்காலிகமாக தனிமைப்படுத்தும் வகையில் வேண்டுகோள் முன்வைத்துள்ளோம் என்றும், அவர் கூறினார்.
விரைவில் குறித்த கிராமத்தில் உள்ள MN/70 கிராம அலுவலர் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்டு அந்தப் பிரதேச மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும், கே.சுதாகரன் தெரிவித்தார்.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago