2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திடீர் ஊரடங்கு அறிவிப்பால் மக்கள் அசௌகரியம்

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

நாடளாவிய ரீதியில் நேற்று  சனிக்கிழமை (02) மாலை 6  மணி தொடக்கம் நாளை  (04) திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் எரிபொருள்களை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில்  காணப்பட்டதோடு, பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகங்கொடுத்தனர்.

மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் அதிக அளவு மக்கள் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், வழமை போன்று எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் நேற்றுக்   காத்து நின்றனர்.

மாலை 6 மணியை கடந்த நிலையிலும் மன்னார் நகர் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி வந்த நிலையில், மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டம் அற்றுப்போனது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .