Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 16 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முறைப்படி திட்டங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், கிளிநொச்சியில், பொதுநூலகம் ஒன்றை நிர்மாணிக்க உதவியளிக்க முடியுமென, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் கொன்சலேட் ஜெனரல் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியா தூதுரகத்தால், கிளிநொச்சி நூலகத்துக்கு, இன்று (16) ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இந்திய அரசாங்கத்தின் கல்வி, கலாசாரம், புலமைப் பரிசில் பரிமாற்றம் குறித்த பங்காளிகளாக, கரைச்சி பிரதேசசபையினர் இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கரைச்சி பிரதேச சபை நூலகத்தை விடுவிப்பது தொடர்பாகவும், அவர் கேட்டறிந்து கொண்டார்.
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago