Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 24 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
திருக்கேதீஸ்வரம் - மாந்தைச் சந்தியில் நிறுவப்பட்ட வளைவுப் பிரச்சினை தொடர்பில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரோடு இன்னும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நியாயமானத் தீர்வொன்று எட்டப்படுமென, மன்னார் சர்வமதப் பேரவைக் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மன்னார் சர்வமதப் பேரவை, இன்று (24) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், திருக்கேதீஸ்வரம் - மாந்தைச் சந்தியில் நிறுவப்பட்ட வளைவு தொடர்பான பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கும் முயற்சியில், மன்னார் சர்வமதப் பேரவை ஈடுபட்டுள்ளதாகவும், அந்த வகையில், இவ.விகாரத்துடன் தொடர்புடைய கத்தோலிக்கத் தரப்பினருடனும் இந்துத் தரப்பினருடனும் முதற்கட்டச் சந்திப்புகளை நடத்தி, ஒவ்வொரு தரப்பினரது நியாயத்தையும் கேட்டறிந்துள்ளதாகவும், சர்வமதப் பேரவைப் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், மன்னார் சர்வமதப் பேரவையில் இருந்து விலகிக்கொள்வதாக, இந்து சமயச் சகோதரர்கள் அறிவித்துள்ள தமது முடிவை, மீள்பரிசீலணை செய்து, மீண்டும் இப்பேரவையில் இணைந்துச் செயலாற்ற முன்வரவேண்டுமென, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago