2025 மே 05, திங்கட்கிழமை

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞன் மடக்கிப்பிடிப்பு

Niroshini   / 2021 மே 23 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - மூர்வீதிஇ குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுகளின் நீண்ட நாட்களாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர், நேற்று(22) மாலை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் திருட முற்பட்ட போது, அப்பகுதி இளைஞர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.

குறித்த பகுதியில் உள்ள வீடுகளில், தொடர்ச்சியாக கோழிகள் திருட்டுப்போவதோடு, வீடுகளில் உள்ள பெறுமதியான பொருட்கள் நாளாந்தம் திருட்டு போவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

திருட்டுச் சம்பவத்துடன் ஈடுபடும் குறித்த இளைஞனை, மன்னார் பொலிஸார் கைது செய்தாலும் உடனடியாக குறித்த நபரை விடுவித்து விடுவதாக, அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை, குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து, குறித்த  நபரை   பிடித்து கட்டிவைத்து, மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

 குறித்த  நபரை கைது செய்த பொலிஸார், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X