2025 மே 08, வியாழக்கிழமை

திருமலை இளைஞனுக்கு கொரோனா

Niroshini   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

ஆழ்கடல் படகில் பயணித்த போது, திடீரென உடல் உபாதை காரணமாக முல்லைத்தீவு - மணல்குடியிருப்பு கடற்கரையில் இறக்கி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருகொணமலை இளைஞனுக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

கிண்ணியா - ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே, இவ்வாறு பாதிக்கப்பட்டவர் ஆவார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருந்தே, கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5 பேர் கொண்ட குழுவினர் கடற்றொழிலுக்காக திருகோணமலையில் இருந்து ஆழ்கடலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதன்போது, இவர்களுடன் பணயித்த குறித்த இளைஞன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்துள்ளதை தொடர்ந்து, முல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்கரையில், அவரை இறக்கிவிட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவில் இறக்கப்பட்ட இளைஞன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து. திருகோணமலை மீனவர்கள் படகுடன், முல்லைத்தீவு கரையில் இருந்து ஆழ்கடலுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X