2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திருவையாற்றின் கீழ் 600 ஏக்கரில் பயிர்ச் செய்கை

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - திருவையாறு ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் 33 வருடங்களுக்குப் பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்டு, 600 ஏக்கர் நிலப்பரப்பில், பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, இரணைமடு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1986ஆம் ஆண்டில், கைவிடப்பட்ட திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டம், தற்போது புனரமைக்கப்பட்டு, விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புனரமைக்கப்பட்ட திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ், இம்முறை 600 ஏக்கர் வரையான நிலப்பரப்பில், உப உணவுப் பயிர்கள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதனை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு, விவசாயிகள் முன்வர வேண்டுமென்று, நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .