2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

திறப்பு விழா

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில், சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிலையம், இன்று (25) காலை திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசிலன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சத்திர சிகிச்சை நிலையத“தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட'‘My Dental Team’  அமைப்பினூடாக இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட எம்.ரூத்திரன் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதி நவீன வசதிகளுடன் கூடிய 'நடமாடும் பற்சிச்சை சேவை வாகனம் இன்று காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து எம்.ரூத்திரன் என்பவரால் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து குறித்த 'நடமாடும் பற்சிச்சை சேவை வாகனம்' மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கில் றோயிடம் கையளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட எம்.ரூத்திரன் என்பவர் உட்பட அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வுகளில் மன்னார் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கில்றோய், மன்னார் வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி, வைத்தி நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .