2025 மே 15, வியாழக்கிழமை

திலீபனை நினைவு கூர்ந்தால் முல்லைத்தீவில் சிக்கல்

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில், தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில், செப்டெம்பர் 28ஆம் திகதி வரை, யாராவது திலீபனின் நினைவேந்தல் நிக​ழ்வை நடத்துவதாக இருந்தால், அவர்களைக் கைதுசெய்வதற்கான நடைமுறை சட்ட அனுமதியை, பொலிஸார் பெற்றுள்ளனர்.

அத்துடன், நீதிமன்றக் கட்டளையை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனிடம், முல்லைத்தீவு பொலிஸார் வழங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தவோர் இடத்திலும் ரவிகரனின் அலுவலகத்திலும் தியாகி திலீபனின் நினைவு நிகழ்வை நடத்தக்கூடாதென, அக்கடளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .