Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 16 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் பொங்கல் நிகழ்வுக்கான தீர்த்தம் எடுத்தல் நாளை (17) திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்ற நிலைமையைக் கருத்தில்கொண்டு, அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கமைய, அனுமதிக்கப்பட்ட 24 பேருக்கு, பி.சி.ஆர் பரிசேதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நிர்வாகத்தினர், கிரியைதாரர்கள், முள்ளியவளை காட்டுவிநாயகர் கோவில் நிர்வாகத்தினர், சிலாவத்தை கோவில்காரர்கள், நோன்பு மடத்தில் நிற்பவர்கள், தீர்த்தக்கரையில் உள்ளஞானவைரவர் கோவில் நிர்வாகத்தினர் என தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள 18 பேருக்கு, நேற்று, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ஆறு பேருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
உழவு இயந்திரத்தில் மட்டுப்படுத்திய நபர்கள் மட்டும் தீர்த்தம் எடுக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago