Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 13 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்துக்குட்பட்ட புலோப்பளை பிரதான வீதி, பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாதிருப்பதைச் சுட்டிக்காட்டியும் இதற்கான தீர்வைக் கோரியும், புலோப்பளை பிரதேச மக்களும் கிராம மட்ட அமைப்புகளும் ஒன்றிணைந்து, இன்று (13) காலை, அமைதிப் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது, புலோப்பளையில் இருந்து அமைதியான முறையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக வந்த மக்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரிடம் கையளித்தனர். பேரணியில் கலந்துகொண்ட மக்கள், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,
“புலோப்பளை கிழக்கு, புலோப்பளை மேற்கு, அல்லிப்பளை, அறத்திநகர், பளை மத்தி போன்ற கிராமங்களின் பிரதான வீதியாகவும் காற்றாலை, மிருக வைத்தியசாலை, தும்புத்தொழிற்சாலை, முன்பள்ளி, பாடசாலைகள் போன்ற முக்கிய இடங்களுக்கான பயன்பாட்டு வீதியாகவும் பெரியபளை, கச்சார்வெளி, முல்லையடி, செல்வபுரம் போன்ற கிராமங்களின் உபவீதியாகவும் கடலுக்கான வீதியாகவும் இவ்வீதி பயன்படுத்தப்படுகின்றது.
“பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் முக்கிய வீதியை, இதுவரை ஏன் பாராதிருக்கிறார்கள் என்ற காரணம் புரியவில்லை. காற்றாலையிடமிருந்து வடமாகாணசபை பெறும் இட வாடகையை, இப்பிரதான வீதிக்கு பயன்படுத்தியிருக்கலாம். எனவே, இவ்வீதியை கட்சி பேதங்களின்றி செப்பனிட்டுத்தர வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ப.ஜெயராணி, “குறித்த வீதி தொடர்பில், கடந்தகால அபிருத்திக் குழுக் கூட்டங்களின் போது கலந்துரையாடப்பட்டது. இவ்வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீதி என்பதால், அவர்களுடனும் பேசப்பட்டது. இவ்வீதியைப் புனரமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், எதிர்வரும் வருட இறுதியில், புனரமைப்புப் பணிகள் நடைபெறும்” என்றார்.
54 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago
1 hours ago