Freelancer / 2023 பெப்ரவரி 09 , பி.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதியில் தனியார் காணியில், விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் இருப்பதாக இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று முன்தினம் (08) மாலை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில், கிராம அலுவலகர், பொலீசார், இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர், தடையவியல் பொலிஸார் முன்னிலையில் கனரக வாகனம் கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சுமார் பத்து அடி ஆழம் தோண்டியும் எதுவும் கிடைக்காத நிலையில், தண்ணீர்
ஊறத்தொடங்கியதைத் தொடர்ந்து, தோண்டும் நடவடிக்கை கைவிடப்பட்டு, கிடங்கு மூடப்பட்டது. R
7 minute ago
17 minute ago
24 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
24 minute ago
28 minute ago