Freelancer / 2022 ஒக்டோபர் 18 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மூன்று முறிப்பு இயற்கை ஒதுக்கிடத்தின் ஐயம்பெருமாள் பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் இருபத்தைந்து வயது மதிக்கதக்க ஏழு அடி உயரமான ஆண் யானை ஒன்று தும்பிக்கை வெட்டிய நிலையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினரால் இனங்காணப்பட்டுள்ளது.
யானையின் தந்தத்தினை கைப்பற்றும் நோக்கத்துடன் குறித்த யானை கொல்லப்பட்டு இருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சந்தேகிக்கின்றனர்..
இந்த சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்கள். (R)
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago