2025 மே 22, வியாழக்கிழமை

’துவரங்குளத்துக்கு பஸ் சேவையை ஏற்படுத்தவும்’

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான துவரங்குளத்துக்கு பஸ் சேவையை ஏற்படுத்தித்தருமாறு, வவுனியா - நொச்சிமோட்டை கிராம  அலுவலர் பிரிவிலுள்ள துவரங்குளத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில், ​தொடர்ந்து கருத்துரைத்த அவர்கள், 2010ஆம் ஆண்டு மீள்குடியமர்த்தப்பட்ட தாங்கள் சீரான போக்குவரத்து இன்மை. தமது பிள்ளைகளுக்கான முன்பள்ளி தேவை என்பவற்றை வலியுறுத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

நொச்சிமோட்டைப் பகுதியிலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ள துவரங்குளம் பகுதியில், 25 தொடக்கம் 30 வரையான குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எமது ஜீவனோபாயமாக கூலித்தொழிலையே மேற்கொண்டு வருகின்றோம்.

பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், போன்ற இதர தேவைகளின் நிமித்தம் வவுனியா நகருக்கே செல்லவேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.
முதன்மைச்சாலையான ஏ-9 சாலையிலிருந்து 3 கிலோமீற்றர் நடந்தும் ஏனைய வாகனங்களிலும் எமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

எமது நிலை தொடர்பாக, மக்கள் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுபோதும் எமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X