2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தேக்கு மரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர்கள் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் வீதியில், 9ம் கட்டைக்கும் கற்குவாரிக்கும் இடைப்பட்ட பகுதியில் தேக்கு மரக் குற்றிகளை களவாக ஏற்றிச் சென்றவர்களை இராணுவத்தினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.  

வாகனத்தில் தேக்கு மரக் குற்றிகள் இருப்பதை கண்ட இராணுவத்தினர் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் தேக்கு மரக் குற்றிகளை ஏற்றி சென்ற  வாகனத்தினையும் நபர்களையும்  ஒப்படைத்தனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேக்கங் காடுகள் அழிக்கப்பட்டு தேக்கங் குற்றிகள் களவாக எடுத்துச் செல்லப்படும் சம்பவங்கள் கடந்த பல மாதங்களாக தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது. 

துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைபற்று, மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தேக்கங் காடுகளில் இருந்தே களவாக மரங்கள் வெட்டப்பட்டு, இரவு வேளைகளில் மரங்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .