Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில், பாடசாலைகளுக்குச் செல்லாத மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட ஏழு சிறுவர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர்.
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில், பாடசாலைகளுக்குச் செல்லாது அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட நிலையில் காணப்படுகின்ற சிறுவர்களை, மீளக் கற்றலில் இணைக்கும் வகையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரி உள்ளிட்டோர் கிளிநொச்சி நகரை அண்மித்த ஆனந்தபுரம், சாந்தபுரம் ஆகிய பகுதிகளில், இன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது, மேற்படி ஏழு சிறுவர்களும் பிடிக்கப்பட்டனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட ஏழு சிறுவர்களும், நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேச ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதியபோது, அதில் 4 சிறுவர்களை சான்றுபெற்ற பாடசாலையல் தங்க வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், ஏனைய 3 சிறுவர்களை அவர்களது பெற்றோர்களுடன் இணைத்து கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026