2025 ஜூலை 16, புதன்கிழமை

தேர்த் திருவிழா சோபை இழந்தது

Editorial   / 2017 செப்டெம்பர் 05 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

 

கிளிநொச்சி -  கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா, நேற்று (04) இடம்பெற்றது.

காலை 10 மணிக்கு  ஆரம்ப்பமான வருடாந்த தேர் திருவிழாவில் இம்முறை கலந்துகொண்ட மக்களின் தொகை மிக மிக குறைவாகவே காணப்பட்டது. கடந்த வருடம் கலந்துகொண்டவர்களில்  மூன்றில் ஒரு பகுதி மக்களே இம்முறை கலந்துகொண்டதாக, ஆலய நிர்வாக சபையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

அத்தோடு, கடந்த பத்து நாட்கள் திருவிழா பூசைகளில் கலந்துகொண்ட மக்களின் தொகை மிக மிக குறைவாக காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடங்களில் வடம் பிடித்து தேர் இழுப்பதற்கு  மக்கள் கூட்டம்  முண்டியடித்து நெரிசல்களுக்கு மத்தியில் தங்களது நேற்றிகளை நிறைவேற்றிய போதும், இம்முறை அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்றும் பிரதட்டை நேர்த்தி கடன் செய்பவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வெளியிலிருந்து தூக்கு  காவடி உள்ளிட்ட காவடிகளின் வருகையும் காணப்படவில்லை எனவும் அவர் கவலை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .