2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

‘தேவைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

“கடந்த 30 வருடங்களில் ஏற்பட்ட இழப்புகளையும், அவலங்களையும் மிகக் குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்துவிட முடியாது. படிப்படியாகதான் இப்பகுதியில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும்” என, மேலதிக மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார்.  

பலாலி பொலிஸ் நிலையத்தினரால் நேற்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்ட நடமாடும் சேவையின் இறுதி நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“உண்மையாகவே முப்பது வருடங்களுக்குப் பின்னர், பல்வேறு இடப்பெயர்வுகளை சந்தித்த வயாவிளான் பகுதி மக்கள், மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டப் பின்னர் அவர்களின் தேவை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.  

“தற்போது பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அரச அலுவலகங்களை நாடி செல்லும் நிலை மாறி, அரச அலுவலகங்கள், பொதுமக்களை நாடிச் சென்று சேவை வழங்கும் நிலையாக மாற்றம் பெற்றுள்ளது. அந்த வகையில், பொலிஸ்மா அதிபரின் எண்ணக்கருவுக்கு அமைய, நாடு முழுவதிலும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும், இவ்வாறான பொலிஸ் நாடமாடும் சேவை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது.  

“கடந்த 30 வருடங்களில் ஏற்பட்ட இழப்புகளையும், அவலங்களையும் மிக குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்துவிட முடியாது. படிப்படியாகதான் இப்பகுதியில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும்.  

“மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டப் பின்னர் இந்த மக்கள் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகளில் ஒன்று போக்குவரத்து. அது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .