Niroshini / 2021 நவம்பர் 08 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், அண்மைய நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
இன்று (08) காலை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, இரணைமடு குளத்தின் நீர் மட்டம், 22 அடி 9 அங்குலமாக உயர்வடைந்துள்ளது
இதேபோல், கல்மடு குளத்தின் நீர்மட்டம், 18 அடி 4 அங்குலமாகவும் பிரமந்தனாறு குளத்தின் நீர் மட்டம், 07 அடி 04 அங்குலமாகவும் கனகாம்பிகை குளத்தின் நீர் மட்டம், 10 அடி 9 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.
அத்துடன், அக்கராயன் குளத்தின் நீர் மட்டம், 16 அடி 9 அங்குலமாகவும் கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் மட்டம், 3 அடி 11 அங்குலமாகவும் புதுமுறிப்பு குளத்தின் நீர் மட்டம், 16 அடி 01 அங்குலமாகவும் குடமுருட்டி குளத்தின் நீர் மட்டம், 6 அடி 4 அங்குலமாகவும் வன்னேரிககுளத்தின் நீர் மட்டம், 09 அடி 1 அங்குலமாக உயர்வடைந்துள்ளதாக, மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago