2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘தொடர்ந்து நீர் வழங்கப்படும்’

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி – கண்ணகைபுரத்தில் மேற்கொள்ளப்படும் மேட்டுப் பயிர்ச் செய்கைக்கு, தொடர்ச்சியாக நீர் வழங்குவது என அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக, கண்ணகைபுரம் விவசாயிகள் தெரிவித்தனர்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அக்கராயன் குளத்தின் நீர், கண்ணகைபுரம் கிராமத்தின் மேட்டுப் பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படுவதில்லை என, நீர்ப்பாசன அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகளினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (20) நீர்ப்பாசன அதிகாரிகளும் கண்ணகைபுரம் விவசாயிகளும் கலந்துரையாடியதன் அடிப்படையில், தொடர்ச்சியாக நீர் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .