2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘தொல்பொருள் இடங்களில் எவ்வாறு சிலை வைக்க முடியும்?’

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

தொல்பொருள் உள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எந்த அடிப்படையில் ஒரு மதம் சார்ந்து சிலைகளை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றதென, வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, வவுனியா மாவட்டச் செயலாளருக்கு, அவர் இன்று (07) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குட்பட்ட கச்சல் சமளன்குளம் புனரமைக்கப்படுவதாகவும் அக்குளத்தின் கீழ் உள்ள காணிகள், அப்பிரதேசத்துக்கு வெளியேயிருந்து கொண்டு வந்து குடியேற்றப்படும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கூறப்பட்ட காணிப் பகிர்ந்தளிப்பானது, எவ்வடிப்படையில் பயனாளர் தெரிவு மேற்கொள்ளப்பட்டதெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, தொல்பொருள் திணைக்களமானது தொல்பொருள் பகுதிகளில் உள்ள சின்னங்களை அவை உள்ள படி பாதுகாப்பதற்கு மேலதிகமாக, எவ்வடிப்படையில் ஒரு மதம் சார்ந்த வழிபாட்டு உருவச் சிலைகளை அங்கு வைத்துள்ளதெனவும் அச்சிலைகள் அவர்களால் வைக்கப்படவில்லையாயின், சிலை வைப்பதற்கும் அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் யார் அனுமதியளித்ததெனவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .