Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவாக நிலவி வரும் வறுமையை ஒழிக்க தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதோ அல்லது ஏற்படுத்திக் கொடுப்பதோ தான் சிறந்த தீர்வு என நம்புவதாக, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ச.கீதன் தெரிவித்தார்.
தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தான் கஞ்சா, கசிப்பு போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்களின் வாழ்க்கை முறைகள் மாற்றம் பெறுகின்றன எமது பண்பாட்டு விழுமியங்கள் மறந்து போகின்றன எனவும் அவர் கூறினார்.
“2009க்கு முன்னர் நாம் வாழ்ந்த சுழலில் நிரந்தர வீதிகள் இல்லை, மின்சாரம் இல்லை, நிரந்தர வீடுகள் இல்லை, இவ்வாறானவை இல்லாத போதும் தொழில் வாய்ப்புகள் இருந்தது. கலை, பன்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன.
“எமது மாவட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒதுக்கீட்டு நிதியுடன் கரும்பு தோட்டம், கெமிக்கல் பண்ணை, கயூ தோட்டம், உப்பளம் போன்றவற்றில் ஊடாக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வறுமையை நீக்க வழிசமைக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
45 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
5 hours ago