Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிஜோபன்
முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் செல்வபுரம் கிராமத்திலுள்ள கிராம சேவையாளரும் காணி அலுவலகரும் பக்கச்சார்பாக செயற்பட்டதான் காரணத்தினால், கடந்த 7 வருட காலமாக தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதே பகுதிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்நத 6 பேர், இன்று வியாழக்கிழமை (25) முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 1983ஆம் ஆண்டு முதல் குறித்த பகுதியில் வசித்து வரும் காணியை, பிரிதொரு நபர் உரிமை கோரி வந்துள்ள நிலையில், அதற்கான தீர்வு கடந்த 7 வருடங்களாக கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் குறித்து, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எதிர்தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் காணியின் உரிமத்தை எதிர்தரப்பினருக்கு வழங்கலாம் என்றும் மாகாண காணி ஆணையாளர் தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, தமக்குரிய நீதி கிடைக்கும் வரையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரசியல்வாதிகளும் வருகை தரும் பட்சத்திலேயே போராட்டம் கைவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தனர்.
'எவ்வித பாதுகாப்பற்ற கொட்டைகையிலேயே நாம் 7 வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம். மலசலக்கூடம், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட எந்தவொரு அரச உதவிகளையும் கிராம சேவையாளர் எமக்கு தரவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அரச அதிகாரிகள் பக்கச்சார்பாக செயற்படுவதாக நாம் கருதுகின்றோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்' என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
28 minute ago