2025 ஜூலை 05, சனிக்கிழமை

நீதிகோரும் நடைப் பயணத்துக்கு அழைப்பு

George   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சண்முகம் தவசீலன், நடராசா கிருஸ்ணகுமார்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தல், தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தல் ஆகிய கோரிக்கையை முன்வைத்து நீதிக்கான நீண்ட நடைப் பயணத்தை மேற்கொள்ள, கிளிநொச்சி கிராம மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசமும் பொது அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

இது பற்றி அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 'எதிர்வரும் 22.08.2016 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு ஆனையிறவில் ஆரமபமாகும் நடைபவனி, கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனை முன்பாக உள்ள ஐ.நா செயலகத்தைச் சென்றடையவுள்ளது.

தமிழர் தாயகத்தின் நயினாதீவில் 60 அடி புத்தர் சிலை வைக்கப்பட்டமை, கொக்கிளாய் கருநாட்டுக்கேணி விநாயகர் ஆலயம் இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைக்கப்பட்டமை, திருகோணமலை சாம்பல் தீவில் புத்த விகாரை அமைக்கப்பட்டமை, திருக்கோணேஸ்வரம் ஆலயச் சூழல் பௌத்த மயமாக்கப்பட்டமை, தம்புள்ளைக் காளி கோவில் இடிக்கப்பட்டமை, கிளிநொச்சி லும்பினி விகாரைக்காகத் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டமை,

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயம் அருகே பௌத்த விகாரை அத்துமீறி அமைக்கப்படுகின்றமை,
மாங்குளம், இரணைமடுச்சந்தி, பரந்தன், கிளிநொச்சி, திருக்கேதீஸ்வரம், பூநகரிவாடியடி, கனகராயன்குளம் பெரியகுளம், கிருஸ்ணபுரம் போன்ற பகுதிகளில்அத்துமீறிப் புத்தர் சிலைகளை நிறுவிப் பௌத்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டுவருகின்றமை, பள்ளிக்குடா புனித தோமையர் தேவாலயத்தையும் இரணைதீவு புனிதஅந்தோனியார் தேவாலயம் என்பவற்றைக் கடற்படை ஆக்கிரமித்தமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துன், மீள்குடியேற்றம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தல், இனப்படுகொலைக்கு நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்நடை பயணம் இடம்பெறவுள்ளது.

நீதி கோரும் நீண்ட நடைப் பயணத்தில் அரசியல் தலைவர்கள், மத குருமார்கள், மதஅமைப்புக்கள், கிராமிய சமூக பொதுசன நிறுவனங்கள், வர்த்தகர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .