Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 நவம்பர் 11 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம் பகுதியில் தற்போது 108 ஏக்கர் வயல் நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் நெல்லை உலர விடுவதற்கான தளங்கள் எவையும் இல்லையென வன்னிவிளாங்குளம் கமக்கார அமைப்பு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு - மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வன்னிவிளாங்குளத்தின் கீழ் வருடாந்தம் 108 ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கையும் 50 ஏக்கர் வரையான சிறுபோக செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவ்வாறு செய்கைப்பண்ணப்பட்டு அறுவடை செய்யும் நெல்லினை பதனிட்டு களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய வகையில் நெல் உலர விடும் தளங்கள் எவையும் இல்லை என்றும் இதனால் அறுவடை செய்யும் நெல்லை உடனடியாக குறைந்த விலைகளில் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அத்துடன், மாங்குளம் - வெள்ளாங்குளம் பிரதான வீதியில் வைத்து உலரவிட்டு வருவதாகவும் இதனால் போக்குவரத்துக்கள் கூட பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள இப்பகுதி கமக்கார அமைப்பு, தமக்கான நெல் உலர விடும் தளம் ஒன்றினை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago