Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா நகர சபை நிர்வாகத்துக்கு எதிராக, நகரசபை ஊழியர் ஒருவர், கடந்த 13 நாள்களாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
வவுனியா நகர சபையின் பொது நூலகத்தில் பணியாற்றி வந்த க.கோல்டன் என்ற நூலக பணியாளரே, தனக்கு நகர சபை நிர்வாகம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து, இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இவருக்க ஆதரவு தெரிவித்து, சக தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த க.கோல்டன், தான் கடந்த 20 வருடங்களாக பொது நூலகத்தில் பணியாற்றி வருவதாகவும் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த காலத்தில், தான் போராட்டங்களை முன்னெடுத்திருந்ததாகவும் கூறினார்.
இதன் காரணமாக, தன்னை பழிவாங்கும் முகமாக, தனக்கு நகர சபை நிர்வாகத்தினரால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தன்னை பணியில் இருந்து இடைநிறுத்தி, நகர சபை பூங்காவில் சுத்திகரிப்பு பணிக்கு நகர சபை நிர்வாகம் அமர்த்தியுள்ளதாகவும் சாடினார்.
இதன் காரணமாக, தனது பணியின் முன்னனுபவ காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை பழிவாங்குவதை நகர சபை நிர்வாகம் நிறுத்தி, தனக்கு மீண்டும் நூலகத்தில் பணி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.
இப்போராட்டம் தொடர்பாக நகர சபை நிர்வாகத்திடம் கேட்டபோது, குறித்த பணியாளரின் நியமனம் தொடர்பான வேலையே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
அத்துடன், அனைத்து ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் சுழற்சி முறையில் பணியை மாற்றி வழங்கும் முகமாகவே, பணிமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பணியாளருக்கு தங்களால் அநீதி இழைக்கப்படவில்லை என்றும், நகர சபை நிர்வாகம் தெரிவித்தது.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago