2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நங்கூரம் இடும் மையத்தினை அமைத்துத் தருமாறு கோரிக்கை

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவுக் கரையோரத்தில் மூன்றிடங்களில் நங்கூரம் இடும் மையத்தினை அமைத்துத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்தார்.

முல்லைத்தீவில் துறைமுகம் அமைப்பதற்கான தரைத்தோற்றம் இல்லையென அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையில் மாத்தளன், முல்லைத்தீவு நகரம், செம்மலை ஆகிய மூன்றிடங்களில் நங்கூரம் இடும் மையத்தினை அமைத்துத் தருமாறு சமாசத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே முல்லைத்தீவுக் கரையோரத்தில் வெளிச்ச வீட்டினை அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .