2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நடமாடும் சேவை

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், இரணைதீவு மக்களுக்கான நடமாடும் சேவை ஒன்று, நேற்று நடைபெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் 2017ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குறித்த பகுதியில் மக்கள் குடியேறிய காலப்பகுதியிலிருந்து அவர்களின் அடிப்படை தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தது. இதனடிப்படையில் குறித்த விடயங்கள் தொடர்பில் குறித்த நிறுவனம் அப்பகுதி மக்களுடன் இணைந்து இவ்வாண்டு இரண்டாம் மாதமளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

தொடர்ந்து குறித்த பகுதிக்கு மார்ச் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், குறித்த பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

அதனடிப்படையில், நேற்று குறித்த நடமாடும் சேவையானது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நடமாடும் சேவைக்காக 16 அரச நிறுவனங்கள் அழைத்து வரப்பட்டு, அவற்றின் ஊடாக இப்பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை ஆராயப்பட்டு அவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் குறித்த நடமாடும் சேவை நடைபெற்றது.

இதேவேளை குறித்த பகுதியில் இயற்கை வழளங்களை சூரையாடப்புடுவதாக, நேற்று, பொலிஸாரிடம் பிரதேச மக்கள் நடமாடும் சேவையில் முறைப்பாடு செய்தனர்.

இதேவேளை குறித்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது, அப்பகுதியில் கடற்படை உத்தியுாகத்தர் உருவரினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. குறித்த ஒலிப்பதிவு செய்யப்படும் சம்பவம் தொடர்பில் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜா குறித்த உத்தியுாகத்தரை அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .