2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நவீன கற்றல் முறை வகுப்பறை அங்குரார்ப்பணம்

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களுக்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி, நேற்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களின் கற்றல் வசதியை மேம்படுத்தும் நோக்குடன், குறித் நவீன கற்றல் வகுப்பறை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது,

குறித்த நிகழ்வு, பாடசாலை முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் கல்விதிறனை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சால், 26 இலட்சம் பெறுமதியான 40 ரப்கள், சிமாட் போட் ஆகியன இன்று கையளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் சர்வதேச கல்வி முறைமைக்கமைய மாற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி முறை மாற்றத்துக்கமைய குறித்த நவீன கணித வகுப்பறை, இன்று கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.ஜோன் குயின்ஸ்ரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .