2025 மே 08, வியாழக்கிழமை

நாகதம்பிரான் வருடாந்த பொங்கல் விழா

Niroshini   / 2021 ஜூன் 08 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - பூதன்வயல் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு வேம்படி நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா, நேற்று (07), ஐவரின் பங்குபற்றுதலுடன் நடை;பெற்றது.

இந்த கோவிலின் வருடாந்த பொங்கல் விழாவில், வருடாவருடம் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொள்வதுடன், பக்தர்கள் காவடி, பாற்செம்பு, தூக்குக்காவடி, தீக்காவடி உள்ளிட்ட நேர்த்திகடன்களையும் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில், தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, இவ்வருட பொங்கல் விழாவானது ஐந்து பேரின் பங்குபற்றுதலுடன், சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு, அமைதியான முறையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X