2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாக சார்ள்ஸை களமிறக்கத் தீர்மானம்

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை மீண்டும் களமிறக்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழுக் கூட்டம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் அலுவலகத்தில், நேற்று (09) மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆயராயப்பட்டன.

மேலும், கட்சிக்கு எதிராகச் செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவதெனவும் கிராம மட்டங்களில் மக்கள் சந்திப்புக்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளுவதெனவும் தீர்மானிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .