2025 மே 05, திங்கட்கிழமை

’நாடாளுமன்றத்துக்கு பசில் வரவேண்டும்’

Niroshini   / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

நாடாளுமன்றத்துக்கு முன்னால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஷ வரவேண்டுமெனத் தெரிவித்த சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, மீண்டும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்க்பப்ட்டுள்ளது.

அவ்வறிக்கையில், 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த  பசில் ராஜபக்ஷவின் ஆக்கபூர்வமான பொருளாதார கொள்கைகளை கொண்டு நாட்டில் பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டாரென்றார்.

தெற்கில் அதிவேக நெடுஞ்சாலைகள், நாடு முழுவதும் புதிய கைத்தொழில் பேட்டைகள், ஆடை தொழிற்சாலைகள், யுத்த காலத்தில் பல வருடங்காளக தடைபட்டிருந்த  தெற்கிலிருந்து யாழ்ப்பணம் - மன்னார் வரையிலான ரயில் பயணம் மறுசீரமைப்பு, இலங்கையில் எந்த பகுதிகளுக்கும் பயணிக்க கூடிய பாரிய வீதி அபிவிருத்திகள் என பல அபிவிருத்திகளை  பசில் ராஜபக்ஷ மேற்கொண்டாரெனவும், அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இறுதி யுத்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு வாழ் மக்களுக்காக வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என புதிய திட்டங்களை உருவாக்கி, அதனூடாக வடக்கு - கிழக்கு வாழ் மக்களுக்கு பாரிய அபிவிருத்திகளை வழங்கி வைத்திருந்தார் எனத் தெரிவித்த உதயராசா, அத்துடன் திவிநெகும என்ற புதிய  திட்டத்தை ஆரம்பித்து வைத்து, பல்லாயிரக்கணக்கானோரின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தியிருந்தாரெனவும் கூறினார்.

எனவே, இவ்வாறான சிறந்த சிந்தனையுடைய, நாட்டிலும் நாட்டு மக்களிலும் அதிக விருப்பம் கொண்ட பசில் ராஜபக்ஷவை  20வது திருத்த சட்டமூலத்தின் நிமித்தம் நாடாளுமன்ற உறுப்பினராக்கி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சை வழங்கி, நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு வழிவகுக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X