Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 01 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்றிட்டம் ஜனாதிபதியின் வழிகாட்டலில் அவரின் தலைமையில் நடைபெறவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கோதீஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற செயற்றிட்டம் ஜூன் மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதில் ஜனாதிபதி செயலகத்தால் முன்னெடுக்கப்படுகின்ற 10 வேலைத்திட்டங்களும் மற்றும் ஏனைய அமைச்சுகள் வடமாகாண சபையால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் என்பன கிராம மக்களை சென்றடையகூடியதாக செயற்றிட்டங்களை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுகின்றதான கிராமசக்தி மற்றும் நிலைபேறான அபிவிருத்தி செயற்றிட்டம், போதை ஒழிப்பு செயற்றிட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்த காலப்பகுதியில் நடைபெறவுள்ளன. அதன்படி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்படவுள்ளது என்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏனைய அமைச்சுக்கள் ஊடாக முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
இதில் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதும், மக்களிடம் கையளிப்பதுமான வேலைத்திட்டங்களும் குறிப்பாக காணி தொடர்பான நடமாடும் சேவை என்பன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் ஊடாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் இலங்கையில் செயற்படுத்தப்படுகின்ற திட்டங்களை முன்கொண்டு செல்வதற்கும் குறிப்பாக ஜனாதிபதி செயலகத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு வேதை்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்பதுடன் இதனுடன் மாவட்டத்தில் பல்வேறு சிரமதான நிகழ்ச்சிகள், சுற்றாடலை மேம்படுத்துகின்ற நிகழ்ச்சிகள், இதற்கூடாக முன்னெடுக்கவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
19 minute ago
25 minute ago