Editorial / 2019 ஜூன் 26 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மு.தமிழ்ச்செல்வன்
வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற ஜனவரி ஏழாம் திகதி முதல் நான் குடியை விட்டுவிட்டேன். என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய போதை தடுப்பு வாரத்தின் வட மாகாண நிகழ்வில் கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகன பேரணியின் இறுதியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
முன்னர் நான் விருந்துபசாரங்களில் கலந்துகொண்டால் மட்டும் மது அருந்துவதுண்டு. அது எனது நண்பர்களுக்கு தெரியும் ஆனால் எப்பொழுது ஆளுநராக பொறுப்பேற்றேனோ அன்றிலிருந்து எந்தவொரு குடியையும் தனிப்பட்ட ரீதியாகவோ, பிரத்தியேகமாகவோ கையில் எடுத்தது கிடையாது. இதுவொரு போராட்டம் இந்த போராட்டத்தை முடிக்கும் வரை நாங்கள் சத்தியவான்களாக இருக்க வேண்டும். காலையில் ஒன்றை சொல்லி மாலையில் ஒன்றை செய்யக் கூடாது. எனவே போதை என்ற பிசாசுக்கு எதிராக நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago