2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாயாற்று பகுதியில் இரண்டு வாடிகள் தீக்கிரை

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - நாயாற்று பகுதியில், நேற்று (03) இரவு, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடிகள், இனந்தெரியாத 2 நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

நாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், வாடி அமைத்து கடற்றொழிலுக்காக புத்தளத்தில் இருந்து வேலைக்கு ஆட்களை வைத்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையிலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வாடிகள் இரண்டும், அதில் இருந்த கடற்றொழிலுக்குப் பயன்படும் இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் எரிந்து சாம்பாராகியுள்ளதுடன் படகு ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .