2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

நிதி மோசடி செய்தவர் கைது

Editorial   / 2017 ஜூன் 10 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

சட்டவிரோதமான பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்டு நிதி மோசடி செய்த நபர் ஒருவரை, வெள்ளிக்கிழமை (09) கைது செய்துள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் குறித்த நபரிடம் தான் செலுத்திய பணத்தை கேட்ட போது, அவர் செல்லுபடியற்ற  1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கியுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் மேலும் பலரிடம் நிதி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாகவும் மறைமுகமாகவும் ஈடுபடும் நிதிநிறுவனங்களுடன் பொது மக்களை தொடர்பு கொள்ள வேண்டாமெனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .