2025 மே 05, திங்கட்கிழமை

நினைவு தூபியில் சுடரேற்றினார் சிவாஜிலிங்கம்

Niroshini   / 2021 மே 17 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (17), முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில், சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கும் சுடர் ஏற்றுவதற்கும், பலருக்கு எதிராக தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், இனப்படுகொலை வாரத்தின் ஆறாவது நாளான இன்று (17)  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்குச் சென்று, சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X