2025 மே 05, திங்கட்கிழமை

நினைவு முற்றத்துக்கு செல்லும் வீதிகளைத் தடை செய்ய முயற்சி

Niroshini   / 2021 மே 17 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு செல்லும் வீதிகளில் தடையை ஏற்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு  மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு, 27 பேருக்கு பொலிஸார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ள அதேவேளை, சுமார் 20 பேருக்கு மேல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறவுள்ளதாக அறியமுடிகிறது

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் அனைத்து பாதைகளையும் தடை செய்வதற்கு, வீதித் தடைகளைப் போடுவதற்கான பொருட்களை, இன்று(17), பொலிஸார் கொண்டு வந்து இறங்கியுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் கப்பல் வீதி சந்தியிலும், சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X