2025 மே 17, சனிக்கிழமை

’நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டால் தண்டனை’

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள், பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்டப் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.

மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகத் துறையினர் தொடர்பாக, அவர் இன்று (10) அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அவர், நியாயமற்ற முறையில் மோசடியாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகத் துறையினரைச் சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள், வவுனியா மாவட்டப் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

சந்தையில் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகப் போலியான தட்டுப்பாட்டை உருவாக்கி, நிர்ணய விலையிலும் பார்க்க அதிக விலையில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் ஒருவகை தந்திரோபாயத்தை, ஒரு சில வியாபாரிகள் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அத்தகைய வியாபாரிகள், பொருள்களைப் பதுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை எமது புலனாய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .