Freelancer / 2022 பெப்ரவரி 12 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னார் - பெரிய பாலம் பிரதான சோதனைச் சாவடி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (12) காலை 6 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாருக்கு குளிர்பான பொருட்களை ஏற்றி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது, மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள கூராய் ஆற்றுப் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் வண்டி மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026