2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்றத் தீர்ப்பை மீறி காணிக்குள் மதில் அமைக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி - தொண்டமான்நகர் கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம், முன்பள்ளி என்பன அமைந்துள்ள காணியில், நீதிமன்ற தீர்ப்பையும் மீறி மதில் அமைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

pc/27/1942/16 இலக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் காணிக்கான எல்லை காட்டப்பட்ட இடத்தை மீறி, தனிநபர் ஒருவர், குறித்த காணியில் மதில் அமைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

இதையடுத்து, இச்செயற்பாட்டைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, தொண்டமான்நகர் சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினரால்,  கரைச்சி பிரதேச சபைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், இது குறித்து, கரைச்சி பிரதேச சபையினரால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்று, சனசமூக நிலையத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X