2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை பிரதிஷ்டை

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு - நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள நாயாறு குருகந்த ரஜமகா விஹாரை மூலஸ்தானத்தில், புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு - பாணந்துறை பகுதியைச் சேர்ந்த அசங்க சாமர என்பவரது அணியினரால், முல்லைத்தீவு பகுதிக்கு, நேற்று (30) இந்தப் புத்தர் சிலை கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விஹாரையில் எந்தவித கட்டுமானப் பணிகள் முன்னெடப்பதற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே 3.5 அடி உயரமான குறித்த புத்தர் சிலை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது, விசேட பூஜை, வழிபாடுகள் நடைபெற்றதோடு, விஹாரைக்கான பல்வேறு தளவாடங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.ஷ

ஆட்சி மாற்றம் இடம்பெற்ற நிலையில், இப்பகுதிக்கு புத்தர் சிலை கொண்டு வரப்பட்டிருப்பது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கலாமென, பலரும் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .