Editorial / 2019 ஜனவரி 26 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கோவில் வளாகத்தில், புத்தர்சிலை அமைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைகள், வியாழக்கிழமை (24) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் கோவிலில் அத்துமீறிய புத்தர்சிலை வழக்கு விசாரணை, பெப்ரவரி 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, அபிவிருத்தி வேலைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
அத்துடன், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை மன்றில் ஆஜராகுமாறு பணிப்புரையும் விடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, குறித்த பகுதிக்கு விசேட போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
34 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
01 May 2026