2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

நீரின்றி அழியும் நிலையில் வயல்

Freelancer   / 2023 ஜனவரி 16 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி பெரியபரந்தன் கமக்கார அமைப்புக்கு உட்பட்ட இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள விவசாயி ஒருவரின் ஐந்து ஏக்கர் வயல், நீரின்றி அழியும் நிலையில் இருப்பதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் காணப்படுகின்ற தன்னுடைய வயல் நிலம் இரண்டு போகம் விதைக்க கூடிய வயல் நிலம் எனவும், எனவே, குறித்த காணிக்கு நீர் விநியோகிக்கின்ற வழியில் தற்போது கழிவு நீர் செல்கின்ற வாய்ககால் சீரமைக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளதால் தன்னுடைய சொந்த செலவில் வயலுக்கு நீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டு குழாய்கள் உடைந்து
காணப்படுகுன்றது என்றார்.

இதனை சீரமைத்து தன்னுடைய ஐந்து ஏக்கர் வயல் காணிக்கும் நீர் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு கமக்கார அமைப்பு மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் ஆகியோரிடம் பல தடவைகள் கோரியும் இதுவரை செய்து தரவில்லை.

நிதியில்லை என்று காரணம் கூறுகின்றனர் எனத் தெரிவித்த அவர் வருடந்தோறும் வாய்க்கால் சீரமைப்பு நிதி உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் கமக்கார அமைப்புக்கு முறையாகச் செலுத்தி வருகின்றேன் ஆனால், தன்னுடைய வயல் வாய்க்கால் இன்றி காணப்படுகிறது என்றார்.

எனவே, தனர் ஐந்து ஏக்கர் வயலும் அழியும் முன்னர் உரிய தரப்பினர் விரைந்து கவனம் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .