Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக் கடந்தந்தான் கிராமத்தில் உள்ள குளத்துக்கு நீர் குடிப்பதற்காக நோய்வாய்ப்பட்ட நிலையில் யானை ஒன்று வருகை தந்த நிலையில், மீண்டும் காட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில், குறித்த குளப்பகுதியில் காணப்படுவதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கடும் வரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், காட்டில் உள்ள மிருகங்கள் நீர் குடிப்பதற்காக அழைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரப்புக்கடந்தான் காட்டில் உள்ள யானை ஒன்று நீர் குடிப்பதற்காக, இன்று வியாழக்கிழமை(12) காலை பரப்புக்கடந்தான் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றை நாடி வந்துள்ளது.
எனினும், குறித்த யானை காட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில், உடல் நோய் வாய்ப்பட்ட நிலையில், குறித்த குளப்பகுதியில் படுத்தநிலையில் காணப்படுகின்றது.
யானை ஒன்று குறித்த குளப்பகுதியில் காணப்படுவதை கண்ட கிராம மக்கள், உடனடியாக கிராம அலுவலகரின் கவனத்துக்குகுக் கொண்டு சென்ற நிலையில், கிராம அலுவலகர் அடம்பன் பொலிஸ்,வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
31 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago